பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலில் பாய்ந்து இனந்தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரி ஒருவரிடம் வினவிய போது, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த 1046 இலக்க இரவு அஞ்சல் புகையிரதத்தில் ஆண் ஒருவர் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
குறித்த நபர் சுமார் 45 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் இன்று 29 ஆம் திகதி அதிகாலை ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர் தொடர்பில் உரிய தகவல்கள் இல்லை எனவும், நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.
