Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

August 11, 2026

சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

August 11, 2026

குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தேர்தல் குண்டே 1,700 – அரசாங்கமும், கம்பனிகளும் இணைந்து நாடகம் – ஹட்டனில் திகாம்பரம் தெரிவிப்பு
மலையகம்

தேர்தல் குண்டே 1,700 – அரசாங்கமும், கம்பனிகளும் இணைந்து நாடகம் – ஹட்டனில் திகாம்பரம் தெரிவிப்பு

ThanaBy ThanaJuly 29, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களை ஏமாற்றியுள்ள இந்த அரசாங்கத்துக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என்பதுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

ஹட்டனில் (28.07.2024) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என்று மே முதலாம் திகதி கொட்டகலைக்கு வந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோர் உறுதியளித்தனர். ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கூட மீளப்பெறப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக தேர்தல் குண்டாகவே 1,700 ரூபா போடப்பட்டுள்ளது என அன்றே நான் சுட்டிக்காட்டி இருந்தேன். அது உண்மையாகியுள்ளது. அரசாங்கமும், கம்பனிகளும் இணைந்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளன.

எமது மக்களை எந்நாளும் ஏமாற்ற முடியாது. எமது ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். சஜித் பிரேமதாச இது தொடர்பில் எம்மிடம் உறுதியளித்துள்ளார்.

மக்களை ஏமாற்றும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.  மக்கள் எமது பக்கமே உள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களுக்கு துரோகம் இழைக்காது. எமது ஆட்சியில் காணி உரிமையும் நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026
    Editors Picks

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026

    குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

    August 11, 2026

    கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026

    குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.