இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர் விராட் கோலி இன்று (29) இலங்கையை வந்தடைந்தார்.
இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி கடந்த 27ம் திகதி ஆரம்பமான நிலையில் இந்தியா 2-0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளதுடன், மேலும் ஒரு போட்டி மீதமுள்ளது.
இந்தநிலையில், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.