மத்திய மாகாணத்தின் 15 கல்வி வலயங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மாகாணமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் 45 அணிகள் பங்குபற்றின.
குறித்த போட்டிகள் கடந்த 26ஆம் திகதி திகதி இடம்பெற்றிருந்தது.
போட்டியில் பங்கு பற்றிய நு/கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலய அணி இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. குறித்த பாடசாலை நுயானது வரெலியா கல்வி வலயத்தில் காணப்படும் கஷ்ட பிரதேச பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாரான நிலையில் குறித்த அணியை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்கள் பாடசாலையின் அதிபர் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பாடசா லையின் பழைய மாணவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
