பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ (30) விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, பால் மாவின்; விலையை ஓரளவு குறைப்பு முடியும் என நம்புவதாக தெரிவித்த அமைச்சர், விலையை கணக்கிடுவதற்கு நுகர்வோர் அதிகாரசபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும், இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி நுகர்வோருக்கு தேவையான சலுகைகளை வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்;.
