Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

August 18, 2026

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

August 18, 2026

​”ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘சமித்புர சது’ இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!”

August 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மகளின் மீது மோதிய லொறி – துரத்திச் சென்ற தந்தை: இறுதியில் கொலையாக மாறிய அசம்பாவிதம்.
இலங்கை

மகளின் மீது மோதிய லொறி – துரத்திச் சென்ற தந்தை: இறுதியில் கொலையாக மாறிய அசம்பாவிதம்.

ThanaBy ThanaAugust 2, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மகளின் மீது மோதிய லொறி – துரத்திச் சென்ற தந்தை: இறுதியில் கொலையாக மாறிய அசம்பாவிதம்.

விபத்தை ஏற்படுத்திய லொறியை பின்னால் துரத்திச்சென்ற நபரொருவர் எதிர்பாராவிதமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இரத்தினபுரி பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொடை – அம்பெவில பகுதியை சேர்ந்த யூ,எ.திலின ரங்க லால் எனப்படும் 32 வயதுடைய நபர் நேற்று பிற்பகல் தனது மனைவியையும் மகளையும் அழைத்து கொண்டு தனது மகளுக்கு தடுப்பூசி ஒன்று போடுவதற்காக பலாங்கொடை வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

மகளுக்கு தடுப்பூசி போட்டு கொண்டு வீடு திரும்பும் வழியில் பலாங்கொடை பேருந்து தரிப்பிடம் அருகில் வியாபார நிலையம் ஒன்றிற்கு செல்வதற்காக நின்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிருத்தி விட்டு மகளையும் அவ்விடத்தில் இருக்குமாறு கூறிவிட்டு வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

எதிர்ப்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்த லோறி ஒன்று நிருத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் மகளையும் இடித்து சென்றுள்ளது. இதனை அவதானித்த திலின ரங்க லால் கோசமிட்டு லோறியினை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

எவ்வாறாயினும் மோட்டார் சைக்கிளையும் அவரது மகளையும் மோதிய லோறி சாரதி லொறியை நிறுத்தாமல் அங்கிருந்து மிக வேகமாக தப்பி சென்றுள்ளார்.

விபத்துக்குள்ளான மகளை அவ்விடத்தில் இருத்தி விட்டு மோட்டார் சைக்கிளை எடுததுக்கொண்டு திலின லோறியினை துரத்தி சென்றுள்ளார்.

லோறி சாரதி பலாங்கொடை – கல்தொட்ட பிரதான வீதியில் அதிக வேகத்தில் செல்வதை கண்ட திலின அதனை துரத்தி சென்று லோறியை மடக்கி பிடித்து அதில் ஏறுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

அப்போது குறித்த லோறி சாரதி, அவரை இறக்கிவிட முயற்சி செய்யும் நோக்கத்தில் அதிக வேகத்தில் சென்று மின் கம்பத்தில் மோதியதால் திலின கொல்லப்பட்டார்.

லொறியை துரத்தி சென்ற குறித்த திலின சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை நீதிமன்ற நீதிவான் பாக்யா விக்ரமசிங்க சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் மூலம் பிரதே பரிசோதனையை மேற்கொண்டு நிதிமன்றத்தில் சம்பவம் தொடர்பிலான ஆதாரங்களை முன்வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஏழு வயதுடைய மாணவி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை தேடும் பனியில் பலாங்கொடை பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

    August 18, 2026

    ​”ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘சமித்புர சது’ இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!”

    August 18, 2026

    ​”டிட்வா சூறாவளி நிவாரண நிதி: 70 சதவீத நிதி இன்னும் செலவிடப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சகம் அவசர உத்தரவு!”

    August 18, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.