கம்பளை இந்து தேசிய கல்லூரியின் பிரதி அதிபராக எம் .நேரு அவர்கள் (01/08) தனது கடமைகளை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இவர் தெல்தோட்டை மலைமகள் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் அந்த பாடசாலையின் ஆசிரியரும், பிரதி அதிபருமாக கடமையாறியுள்ளதுடன். கம்பளை கல்வி வலயத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் ICT பாட வளவாளராக கடமையாற்றியதுடன், 2023.05.13 ஆம் திகதி முதல் கம்பளை நயாபான தமிழ்
வித்தியாலயத்தில் அதிபராக கடமையாறியுள்ளார். இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுமாணிப் பட்டத்தையும், ICT டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பட்டத்தை பெற்றுள்ளதுடன், ICT, Maths போன்ற பாடங்களில் சிறந்த ஆசானும் ஆவார். ஆசியர் வாண்மைக்கான பல செயலமர்வுகளை நடாத்திய அனுபவமும் பாடசாலை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்ட அனுபவமும் கொண்டவர். MIU பல்கலைக்கழகத்தில் BEd பாட விரிவுரையாளராகவும் கடமையாற்றுகின்ற திறமை மிக்க பிரதி அதிபரை இந்த பாடசாலை பெற்றுள்ளது. இவரது சேவை இந்த பாடசாலைக்கு கிடைக்க வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறுவதுடன் இவரது சேவை சிறப்பாக அமைய எமது பாடசாலையின் சார்பிலே பாராட்டுகளையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிபர், எஸ் .ரகு, கம்பளை இந்து கல்லூரி, கம்பளை.