இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹாஓயா – அரலகங்வில வீதியில் எம்.டி.கே ஏரிக்கு செல்லும் சந்திக்கு அருகில் நேற்று (03) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மஹா ஓயாவில் இருந்து அரலகங்வில திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று எதிர்திசையில் வந்த மற்றுமொரு தனியார் பேருந்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 02 ஆண்கள், 12 பெண்கள், 06 சிறுவர்கள் மற்றும் 02 சிறுமிகள் காயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்து ஒன்றின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மஹாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.