கே.தெஹி.ஸ்ரீவாணி தமிழ் மகா வித்தியாலயம் சபரகமுக மாகாண பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஆண் பெண் இருப்பாலாறும் பங்கு பற்றி வரலாற்றில் முதல்முறையாக அகில இலங்கைபோட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் இரண்டாவது தடவையாகவும் அகில இலங்கை போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். இவ்வாறான வெற்றிக்கு பாடசாலையின் அதிபர் திரு. சிவபாலன் அவர்களும் உப அதிபர் திரு. டீன் குமார் அவர்களும் விளையாட்டுப் பயிற்சிவிப்பாளர் திரு. ஆனந்தகுமார் அவர்களினதும் மற்றும் பாடசாலையில் ஆசிரியர்களின் அயராத உழைப்புமே வெற்றிக்குதுணையாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான மலையகத்தின் கிராமப் பகுதியில் அமையப்பெற்று எந்தவிதமான வளங்களும் அற்ற நிலையில் மாணவர்கள் திறமையானவர்களாக மிதிர்வதை எண்ணி நாங்கள் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
பாடசாலை சமூகம்