லிந்துலை ,கேம்பிரிதோட்டத்தில் CPL கிரிக்கெட் போட்டி வாகன பேரணியோடு ஆரம்பமானது..!
கேம்பிரி இளைஞர்களின் முயற்சியில் வருடாந்த கிரிக்கெட் திருவிழாவாக மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெறும் கிம்ரு பிரிமியர் லீக் போட்டி எதிர்வரும் 10ம் திகதி இடம் பெற உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் (08) மெராயா நகரில் இருந்து எல்ஜின் பிரதான வீதியினூடாக கேம்பிரி கீழ் பிரிவு மற்றும் கேம்பிரி மேற்கு பிரிவு வரை வாகன பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு வெற்றி கேடயங்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெறும் இப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை 10ம் திகதி அன்று நுவரெலியா சினிசிட்டா விளையாட்டரங்கில் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

