கொத்மலை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக நிர்வாக பிரிவுக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்ட மக்களின் சுடுகாடு, மைதானம், பிரதான பாதை போன்றன அமைந்துள்ள இடத்தில் தனியார் கட்டிடம் அமைக்கப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,தோட்ட இடத்தில் கடைத்தொகுதி ஒன்றை அமைத்து அதை வெளியாருக்கு கொடுக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாடடமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறித்த செயற்பாடுகளை செய்து வரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் உடனடியாக இத்திட்டங்களை கைவிட வேண்டுமென்றும், நிர்மாணிக்கப்பட்டுள்ள கடைத் தொகுதிகளை தமது தோட்ட மக்களுக்கே வழங்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.
