ஹட்டன் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 16.8.2024 வெள்ளிக்கிழமை ஆடிவெள்ளியின் இறுதிவாரமும், ஏகாதசி விரதமும், வரலக்க்ஷ்மி விரதமும் கூடிய சிறப்பான ஒரு நாளாகும்.
ஆடி வெள்ளியின் இறுதிவாரமாகிய அன்றைய தினம் பொங்கல், நேர்த்திகடன்கள் நிறைவேற்றும் அடியார்கள் காலை 7.00 மணிப் பூஜைக்கும் பகல் 12.00 மணிப் பூஜைக்கும் இடையில் நிறைவேற்றலாம்.
அன்று ஆலயத்தில் வரலக்ஷ்மி விரதம் சிறப்பாக நடைபெற அம்மன் திருவருள் கைகூடியுள்ளது. அன்றைய தினம் காலை 6.00 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்று தனி நூல் வழங்கப்படும்.
காலை 9.00 மணிக்கு விரதகார அடியார்களுக்கான சங்கல்ப்பம் ஆரம்பிக்கப்படும், தொடர்ந்து திருவிளக்குப்பூஜை, விஷேட அலங்கார பூஜையுடன் அடியார்களுக்கு விரதக்காப்பு வழங்கப்படும்.