Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026

அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

October 10, 2026

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மடுமாதாவுக்கு முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் கொண்டாடியது
கோவில்

மடுமாதாவுக்கு முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் கொண்டாடியது

ThanaBy ThanaAugust 19, 2024Updated:August 19, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

மடுமாதாவுக்கு முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் பல நூற்றுக்கணக்கான இறைமக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தது.

இத் திருவிழாவானது சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் இயக்குனர் அருட்பணி யூட் முரளிதரன் அடிகளாரின் நெறிப்படுத்தலிலும், வழிக்காட்டலிலும், பணியகத்தின் மத்தியகுழுவின் ஒத்துழைப்புடனும் மரியஸ்ரைன் திருத்தலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இத் திருவிழா திருப்பலியானது 17.08.2024சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு திருச்செபமாலையுடன் சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் இயக்குனர் அருட்பணி யூட் முரளிதரன் அடிகளார் தலைமையில் அமலமரி தியாகிகள் சபையை சேர்ந்த உரோமாபுரியில் உயர்கல்வி பயிலும் அருட்பணி பிரசாந் அடிகளார், மற்றும் இந்தியா தென்காசி மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்பணி பொஸ்கோ அடிகளார் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தார்கள்.

விசேட விதமாக இத் திருவிழா திருப்பலிக்கு வெளிநாட்டு பணியகங்களுக்கு பொறுப்பாக இருக்கும் திருமதி #இசபெல் #வாஸ்கஸ், மரியஸ்ரைன் திருத்தலத்தின் மடாதிபதி அருட்பணி #பேற்றர்சூரி மற்றும் மரியஸ்ரைன் திருத்தலத்தின் பொறுப்பாளர் அருட்பணி #லூட்விக் அடிகளார் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

அத்தோடு மடுமாதாவுக்கு முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக திருவிழா திருப்பலியின் நிறைவில் அருட்பணியாளர்கள், மற்றும் வருகை தந்திருந்த இறைமக்கள் புடைசூழ ஆன்மிகப்பணியகத்தின் இயக்குனர் அருட்பணி யூட் முரளிதரன் அடிகளாரினால் அன்னைக்கு முடிசூட்டி வைக்கப்பட்டது.

பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட விதமாக அன்னையின் திருச்சுருப பவணி இடம் பெற்றது.

இப் பவணியின் ஆரம்பத்தில் இளைஞர்கள் அன்னையை தாங்கிய வண்ணமாக வருகை தந்த நிலையில் தொடர்ந்து ஏனையவர்களும் அன்னையின் திருச்சூருபத்தை தாங்கிய வகையில் ஆலயத்தின் முன்பக்கமாக பவணியாக எடுத்து வரப்பட்டது.

இறுதியாக மடுமாதாவிற்கு பாடல்களும், வேண்டுதல்களும், ஆர்பரிப்புக்களும், இடம்பெற்று பிரியாவிடை செபம் உருக்கமாக வேண்டப்பட்டு சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் இயக்குனர் அருட்பணி முரளிதரன் அடிகளாரினால் அன்னையின் சிறப்பாசீர்வாதம் இறைமக்களுக்கு வழங்கப்பட்டது.

மடு மாதா திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் மரியஸ்ரைன் ஆலயத்தில் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    முதலாவது இருபது20 போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

    September 16, 2026
    Editors Picks

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.