Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

October 14, 2026

பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிப்பு
இலங்கை

நுவரெலியாவில் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிப்பு

ThanaBy ThanaJanuary 23, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான நந்தன கலபட தெரிவித்தார்.

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 85 வேட்புமனுக்கள், சுயேட்சைக்குழுக்களின் 6 வேட்பு மனுக்கள் உள்ளடங்கலாக 91 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

நுவரெலியா மாநகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 10 வேட்பு மனுக்களில் சுயேட்சைக்குழுவொன்றின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொட்டகலை பிரதேச சபைக்காக முன்வைக்கப்பட்ட 11 வேட்பு மனுக்களில் சுயாதீன அணியொன்றினதும்  (செந்தூரன்), அபிநவ நிதாஸ் பெரமுனவினதும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, சுதந்திர மக்கள் கூட்டணி, தேசிய ஜனநாயக முன்னணி உள்ளடங்களாக 5 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நோர்வூட் பிரதேச சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட 10 வேட்பு மனுக்களில் மூன்றும்,  நுவரெலியா பிரதேச சபைக்கு முன்வைக்கப்பட்ட 10 வேட்பு மனுக்களில் இரண்டும், ஹங்குராங்கெத்த பிரதேச சபைக்கு முன்வைக்கப்பட்ட 8 வேட்பு மனுக்களில் ஒரு வேட்பு மனுவும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.

அக்கரபத்தனை பிரதேச சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 9 வேட்பு மனுக்களில் லங்கா சமசமாஜக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வலப்பனை பிரதேச சபைக்காக முன்வைக்கப்பட்ட 9 வேட்பு மனுக்களில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட 9 வேட்பு மனுக்களில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், கொத்மலை பிரதேச சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட 6 வேட்பு மனுக்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபைக்காக முன்வைக்கப்பட்ட 12 வேட்பு மனுக்களில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அட்டன் – டிக்கோயா நகர சபைக்காக முன்வைக்கப்பட்ட 7 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  அதேபோல தலவாக்கலை, லிந்துலை நகர சபைக்காக முன்வைக்கப்பட்ட 07 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.