மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றமும் இந்து சமயக் கலாசார திணைக்களமும் இணைந்துஇ மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மண்டபத்தில் சுவாமி விபுலானந்தரின் 77ஆவது நினைவு தினமும் சுவாமியின் துறவற நூற்றாண்டையும் இணைத்து முத்தமிழ் விழாவினையும் பீ. மரியதாஸ் எழுதிய ‘மலையகம் இங்கிருந்து எங்கே? என்ற நூல் வெளியீட்டு விழாவையும் கடந்த 11 ஆம் திகதி நடத்தினர்.
பெருந்திரலானவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்குப் பிரதம அதிதிகளாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவும்இ இந்து சமய கலாசாரத் திணைக்கள பணிப்பாளர் வை. அனிருத்தணனும் கலந்து சிறப்பித்தனர்.
விழாவின் அதிதிகளாக கலாநிதி எஸ். கோபாலசிங்கம்இ பேராசிரியர் துரைமனோகரன்இ விக்னேஸ்வரா சர்வானந்தாஇ திருமதி மொனிக்கா கோமஸ்இ வீரகேசரி உதவி செய்தி ஆசிரியர் ஜே.ஜி. ஸ்டீபன்இ ஐபிசி லங்காஸ்ரீ தமிழ் முகாமையாளர் பாஸ்கரன் மகாமணிஇ திருமதி சங்கீதா போபிநாத்இ கே. சந்திரகுமார்இ எம். சிவஞானம்இ எச். எச். விக்கிரமசிங்கஇ எம். எம். பீர்முகம்மதுஇ எஸ். சந்திரசேகரம்இ ஆர். ஸ்ரீதரன்இ சுதர்ஷன்இ தேசபந்து எஸ். கேசவன்இ கு.ஜெயராஜ்இ கு. மோகன் செட்டியார்இ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்;.
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மிக நீண்ட நேரமாக சான்றிதழகளையும் விருதுகளையும் பரிசில்களையும்இ வழங்கி கௌரவித்தது வழாவில் சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வின் ஆரம்பமாக மாத்தளை இந்துத் தேசியக் கல்லூரியில் அமைந்துள்ள சுவாமி திருவுருவச் சிலைக்கு பூஜையும்இ கட்டடத்துக்கு சுவாமியின் பெயர் சூட்டும் நிகழ்வும் இடம் பெற்றது. அத்தோடு முத்துமாரியமன் ஆலயத்தில் இருந்து கலாசார நிகழ்வுகளுடன் கூடிய ஊர்வலம் பணிப்பாளர் வை. அனிருத்தணன் தலைமையில் ஆரம்பமாகி நகர்வலம் வந்து மண்டபத்தை அடைந்தது.
சுவாமி விபுலானந்தரின் பல்வேறு கட்டுரைகளைத் தனித்தனி தொகுப்பு நூல்களாக வெளியிட்டு உதவிய அமரர் அருள் செல்வநாயகத்தில் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் அவரது மனைவியும் கலந்து சிறப்பித்தார். செல்வி ரேஷானி அருந்தமிழ் செல்வத்தின் கடவுள் வாழ்த்தும் திருமதி. சு. தனலட்சுமியின் மன்ற கீதமும் இடம்பெற்றன.
தேவஸ்தானப் பிரதம குரு சிவஸ்ரீ சு. கிருஷ்ணகுமார் குருக்கள் ஆசியுரை வழங்கி விழாவை ஆரம்பித்து வைத்தார்.
வரவேற்புரையை கலாமன்றத்தின் இணைத்தலைவர் கல்வித்தீபம் எஸ். யோகேஸ்வரன் நிகழ்த்தினார். மாத்தளை ராஜ்சிவா சிவலிங்கம் தலைமை வகித்து உரையாற்றினார். பேராசிரியர் துரைமனோகரன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கலாபூசணம் எஸ். கோபாலசிங்கம்இ சுவாமி விபுலானந்தர் பற்றியும் அவரது நூல்களைப் பதிப்பித்த அருள் செல்வநாயகம் பற்றியும் விரிவாகப் பேசினார்.
இவ்விழாவில் மாத்தளை மாவட்டப் பாடசாலைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சுவாமி விபுலானந்தர் விருது வழங்கும் நிகழ்வில் இலக்கியத் துறைக்காக எச். எச். விக்கிரமசிங்கஇ எம்.எம்.பீர்முகம்மதுஇ கல்வித் துறைக்காக வீ. ஜெயகுமார்இ சி. குணசேகரன்இ ந. யோகேஸ்வரன்இ ஊடகப் துறைக்காக ஜே.ஜி. ஸ்டீபன்இ பாஸ்கரன் மகாமணிஇ ஆகியோருக்கான விருதினை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வழங்கி கௌரவித்தார். மாத்தளை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள்இ மற்றும் கலாமன்றம்இ அகில இலங்கை ரீதியில் நடாத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்த முத்தமிழ் விழாவை மிகச் சிறப்பாக நடாத்திய தலைவர் ராஜ்சிவா சிவலிங்கம்இ செயலாளர் தியாகராஜா சத்திய சீலன் மற்றும் மன்ற உறுப்பினர்களை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கா வாழ்த்திப் பாராட்டினார்.
மலையகம் இங்கிருந்து எங்கே? நூல் வெளியீட்டு விழா
விழாவின் சிறப்பு அம்சமாக மலையக ஆய்வாளர் பீ. மரியதாஸ் எழுதிய ‘மலையகம் இங்கிருந்து எங்கே?’ என்ற நூலினை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கா அவர்கள் வெளியிட்டு வைக்கஇ விக்னேஸ்வரா சர்வானந்தாஇ எம். சிவஞானம்இ ஆர். ஸ்ரீதரன்இ எஸ். கேசவன்இ சுதர்ஷன்இ தியாகராஜாஇ சத்திய சீலன் ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் துரைமனோகரன் நூலின் அறிமுக உரையை நிகழ்த்தினார். அவர் நூலின் பல சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.
மரியதாஸ் அறுபதுகளில் மலையகத்திலிருந்து பல்கலைக்கழகம் சென்ற இளம் பட்டதாரிகளுள் ஒருவர். ஆசிரியராகஇ அதிபராகஇ உதவிக் கல்விப்பணிப்பாளராக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கல்வித்துறையில் பணியாற்றியிருக்கிறார். மலையகத்தில் கணிசமான ஆசிரியர்களையும் பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். இயல்பாகவே மார்க்சிய சிந்தனை கொண்ட அவர் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
இந்நூல் அவரது மலையகம் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு நூலாக விளங்குகிறது.
பதினெட்டு கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூலுக்கு ‘பீ.மரியதாஸ் ஹட்டனில் எழுந்த மார்க்ஸியக் குரல்’ என்னும் தலைப்பில் ஒரு சிறந்த அணிந்துரையை ஆய்வாளர் மு.நித்தியானந்தன் வழங்கியுள்ளார். ‘செழுமையான மார்க்சிய ஞானம் கொண்ட மரியதாஸின் எழுத்துக்கள் மலையக எழுத்தில் தனி முத்திரை பதிப்பவை. தன்னை முன்னிலைப்படுத்தாத மாண்பு அவருடையது.
தொடர்ந்தஇ அயராதஇ ஆழ்ந்த அவரது வாசிப்பு எழுத்திற்குக் கனதி சேர்க்கிறது. அனைத்தையும் வரலாற்றுப் பின்புலத்தில் அணுகும் அவரின் ஆய்வு நோக்கு கட்டுரைகளுக்கு ஆழத்தை சேர்க்கிறது. நடைமுறை அரசியலையும் மலையகத்தின் புதிய அரசியல் தேவைகளையும் எழுச்சிகளையும் தனது மார்க்ஸிய தரிசனத்தில் பரிசீலித்து அவர் தந்திருக்கும் இந்த நூல் நமக்குக் கிடைத்திருக்கும் சிறந்த அரசியல்இ சமூகக் கையேடு’ என்று மு.நித்தியானந்தன் பொருத்தமாக தெரிவித்துள்ளார்.
மலையகம் சார்ந்த பல சிறந்த நூல்களை கலைஒளி முத்தையாப்பிள்ளை அறக்கட்டளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்இ அதன் செயலாளராக விளங்கும் எச்.எச்.விக்ரமசிங்கவின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. இந்நூலுக்கான வெளியீட்டுரையை விக்கிரமசிங்க எழுதியுள்ளார். “மரியதாஸ் வாசிப்;பில் மட்டுமே கருத்தூன்றி நின்ற காலத்தில்இ “நீங்கள் எழுத வேண்டும்” என்று அவருக்கு உற்சாகம் ஊட்டி இக்கட்டுரைகளை பத்திரிகைகளில் பிரசுரம் செய்து அவற்றை தொகுத்து நூலாக்கும் பணியில் முழுமூச்சுடன் உழைத்த எச்.எச்.விக்கிரமசிங்கவிற்கு நன்றி கூற வேண்டும்” என்று மு.நித்தியானந்தன் குறிப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமே.
நூலாசிரியர் மரியதாஸ்இ “பீட்டர் மரியதாஸ் ஆகிய நான்” எனும் தலைப்பில் தமது முன்னுரையில் அனுபவங்களையும் இணைத்து எழுதியுள்ளார். அவரது பதினெட்டுக் கட்டுரைகளும் பயனுள்ளவைகளாக விளங்குகின்றன. மலையகம் பற்றிய அவரது விசாலமான நோக்கினை நூல் வெளிப்படுத்துகின்றது. நூலிற்குத் தேவையான புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இந்நூல் மலையக வரலாற்றுப் பாதையில் ஒரு புதிய தடத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம். மலையகம் பற்றிய ஒரு புதிய பார்வையை இந்நூல் வாசகர்களுக்கு வழங்கும். மாத்தளையில் இந்நூல் வெளியிட்டு வைத்த விபுலானந்தர் கலாமன்றத்தினர் பாராட்டுதலுக்குரியவர்கள். அவர்களின் பணி தொடரட்டும்.
கேகாலை – எஸ். மரதன் கிருஷ்ணன்



