ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான நியமனத்தை (21.01.2023) நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழு பதிவு செய்தது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை உள்ளிட்ட 11 சபைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் தெரிவித்தார்.