Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை!

August 11, 2026

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

August 11, 2026

சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா-சீனாக்கொலை தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலை பெண் ஒருவரின் சடலம் மீட்பு
Breaking

நுவரெலியா-சீனாக்கொலை தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலை பெண் ஒருவரின் சடலம் மீட்பு

ThanaBy ThanaAugust 22, 2024Updated:August 22, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட நிலை பெண் ஒருவரின் சடலம் (21) தோண்டி எடுக்கப்பட்டது.

36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.

இவர் அக்ரபத்தனை பகுதியில் அரச வைத்தியசாலையில் தாதியராக பணிபுரிந்து வந்து நிலையில் இடமாற்றம் காரணமாக கோனப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தாதியாக சேவையாற்றிய நிலையில் கடந்த ஆறு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது கணவரால் ஆறு மாதங்களுக்கு முன்னர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நுவரெலியா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது இவர்களது விசாரணைகளின் மூலம் கண்டி பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைக் கைதுசெய்ததுடன், மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர் வாக்குமூலத்துக்கு அமைய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபரிடம் இருந்து அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் பன்வில பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து குறித்த ஆபரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி நேற்று வலப்பனை நீதவான் சியபத் விக்கிரமசிங்க முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பில் மந்தாரநுவர பிரதேசத்தை சேர்ந்த மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்ய உள்ளதாகவும் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026

    குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

    August 11, 2026

    கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு!

    August 11, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026
    Editors Picks

    11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026

    குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

    August 11, 2026

    11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.