தெனியாய படிகல பகுதியில் சுமார் 100 பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டிற்கு இலக்காகி உள்ளனர்.
தெனியாய படிகல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டிற்கு இலக்கான பல மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுமார் நூறு பேர் வரை குளவி கொட்டிற்கு இலக்கான நிலையில் ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 70 பேர் தொடர்ந்தும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரம் ஏழு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக
எம்பிலிபிடிய பொது வைத்திய சாலையில் மாற்றப்பட்டுள்ளனர்.
