எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான
தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியது.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலும் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்றுவருவதுடன் நுவரெலியா தலைமை பொலிஸ்நிலையத்தில் பொலிஸ்உத்தியோகத்தர்கள் தமது தபால்வாக்குகளை அளித்திருந்தனர்.
இதேவேளை இன்றையதினம் மாவட்டச்செயலகங்கள், தேர்தல்அலுவலகங்கள், பாதுகாப்புதரப்பு ஆகியோர் தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாளையும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வி.தீபன்ராஜ்