இவ்வாறு மாயமான மாணவர்கள் சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் என நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காணாமல் போன மாணவர்களில் ஒரு மாணவனின் தந்தை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை நேற்று பதிவு செய்துள்ளார்.
மேலும் தனஞ்செயன் கஜரூபன், சுப்பிரமணியம் தனூஸ்கர், பார்த்தீபன் தியோஜன் ஆகியோருடன் அனூஜன் நேற்று காலை பாடசாலைகளுக்கு சென்று வீடு திரும்பாத காரணத்தால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்து உள்ளார்.
நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.