தெஹிவளை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தெஹிவளை, கடவத்தை வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீடொன்றுக்கு முன்னால் இருந்த நபர் ஒருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்த 45 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
