இரக்குவாணை டெல்வின் A பிரிவு பெருந்தோட்ட பகுதியில் வசிக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் பெரும்பாண்மை இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதேச மக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தில் வசிக்கும் தமிழ் இளைஞன் மீது வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியதுடன் வீட்டிற்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
விஜயகுமார் என்ற இளைஞன்
தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இரக்குவானை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெறுபாண்மை இளைஞர்களை உடனடியாக கைது செய்யுமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கான காரணம் இது வரை தெரியவில்லை.
குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பில்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டைமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.