பாதையில் கிடந்த அரைப் பவுன் தங்க தாலி மற்றும் 3000 ரூபா பணத்தை தொகையை உரியவரிடம் ஒப்படைத்த மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா.
இச் சம்பவம் இன்று காலை மஸ்கெலியா சாமிமலை வீதியில் உள்ள அம்மன் ஆலய பகுதியில் உள்ள பிரதான வீதியில் கிடந்த அரைப் பவுன் தங்க தாலி மற்றும் 3000 ரூபாய் பணம் ஆகியவை கண்டெடுத்த மாணவி பாடசாலை பகுதியில் கடமையில் இருந்த காவல் துறை உத்தியோகத்தர் ஜீ.விக்னேஸ்வரன் அவர்களிடம் ஒப்படைத்ததன் பின் பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரனிடம் அறிவித்ததுள்ளார்.
அதனைத் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எஸ்.புஸப்பகுமார இது குறித்து விசாரணை நடத்தி தவர விட்ட நபர் சம்பந்தமான விசாரணை நடத்திய போது புரவுன்சீக் தோட்ட ராணி பிரிவில் உள்ள ரெங்கன் புவலோஜினி வயது 46 என்பவர் என அடையாளம் காண பட்டு அவரிடம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார முன்னிலையில் ஒப்படைக்க பட்டது.
இன்று காலை 6 மணிக்கு முச்சக்கர வண்டியில் ராணி பிரிவில் இருந்து கொழும்புக்கு பணிக்கு செல்ல சென்ற வேளையில் தவர விட்ட தாகவும் தான் தவர விட்ட பணம் தாலி மீண்டும் தனக்கு கிடைத்ததை யொட்டி மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதிகாரி பாடசாலை அதிபர் மற்றும் மாணவிக்கு நன்றி தெரிவித்தார்.
நேர்மையான முறையில் நடந்து கொண்ட மாணவி பாலகிருஷ்ணன் அபிநயாவை மிகவும் பாராட்டினார் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.