இலங்கையில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.
நாணய நிதியம் கடன் உதவியுடன் தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில்
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மூன்றாவது மதிப்பாய்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.