நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பிரதான வீதியில் வேகமாக வரும் வாகனங்களுக்கு குறுக்கே மட்டக்குதிரைகள் திடீரென வருவதால் விபத்துகள் நிகழ்வது பெருகி வருகிறது. மேலும் நுவரெலியாவில் தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால் சாலையின் வழுக்குதன்மையும் அதிகரித்து விபத்துகளும் ஏற்படுகின்றன. இவை தவிர, வீதியில் திரிவதனால் பொதுமக்கள் மீது மோதுவதினாலும் , அவற்றின் கனத்த உடல் பகுதிகள் இடிப்பதாலும் கூட விபத்துகள் ஏற்பட்டு வீதியால் செல்லும் மக்களுக்கு பல இடையூறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது அத்துடன் நுவரெலியாவிற்கு வரும் வெளிநாட்டு ,உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வீதிகளில் நடமாடுவதற்கு அச்சப்படுவதாக தெரிவிக்கின்றன.