நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் (25) புதன்கிழமை மாலை முச்சக்கரவண்டியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் (26) வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி நுவரெலியா கலுகெல பகுதியை சேர்ந்த (29) வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பாரியளவில் சேதமடைந்துள்ளது விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.