குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் ஐவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில் தோட்ட கிலன்டில் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி ஒருவரும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் ஆவார்கள், மேலும் சாமிமலை பகுதியில் உள்ள ஓல்ட் டன் தோட்டத்தில் கொழுந்து பரித்து கொண்டுருந்த வேலையில் பெண் தொழிலாளி இருவர் உட்பட ஆண் தொழிலாளி அடங்களாக மூன்று பேர் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் ஜந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.