அநுரவுக்கு அரசாங்கத்தை நடத்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும்…
இளம் வாக்காளர் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு – கொழும்பு
அநுரவுக்கு அரசாங்கத்தை நடத்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும்…
ஆனால் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க வேண்டாம்…
பொதுத் தேர்தலை ஒத்திவையுங்கள்… அடுத்த நாள் பௌர்ணமி தினம் ஆகவே மக்களின் மத நல்லிணக்க நடவடிக்கைகளை மதிக்க வேண்டும்…
தேர்தலுக்கு அடுத்த நாள் “கட்டின போய தினமாகும்” இதன் போது தேர்தல் அறிவிக்கப்பட்டு பௌத்தர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றமையால், அதனை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
காலி முகத்திடலுக்கு கொண்டு வரப்பட்ட வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாற்றியமை நல்ல விடயமாகும்.
புதிய ஜனாதிபதிக்கு மக்களுக்கான பல பொறுப்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.