அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் (நிர்வாகம்) பதவியில் பணிபுரிந்த இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான எச்.எஸ்.கே.ஜே.பண்டார அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாக முழுநேரப் பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய தினித் சிந்தக்க கருணாரத்ன அவர்கள் பதவி விலகியமையால் ,அப்பதவி தற்போது வெற்றிடமாகக் காணப்பட்டது.
இதற்கமைவாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
