தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் குழுவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் 3 வினாக்கள் அல்ல 8 வினாக்கள் வெளியாகியுள்ளன. எனவே முதல் வினாத்தாள் தொடர்பான பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.