• முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
What's Hot

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் புதிய விலைகள்.

November 30, 2023

நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நீர் தேவையினை பூர்த்தி செய்ய உதவிய Cargill’s கொத்மலை நிறுவனத்தின் சரூ பிம சமூக நலத்திட்டம்

November 30, 2023

நுவரெலியா தபாலகத்தை கைமாற்றுவதற்கு எதிராக மீண்டும் போராட்டம்

November 30, 2023
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
  • முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
Malayagam.lk
Home » காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம்
இலங்கை

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம்

ThanaBy ThanaJanuary 30, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர் முன்னெடுக்கப்பட்டப்போதும் குறித்தப் பிரதேசத்தில் உள்ள ஒரு நபரினால் குறித்த நபர் சடலமாக கெசல்கமுவ ஓயாவில் மிதந்துக்கொண்டு இருந்ததை இனங்கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரின் பாதணிகள், குடை, மாதாந்த வைத்திய பரிசோதனை, புத்தகம் என்பன மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குறித்தப் புத்தகத்தில் தனக்கு வியாதி தாங்க முடியவில்லை என்றும் தனது முடிவுக்கு தானே பொறுப்பு என்றும் தனது மகன் மிகவும் நல்லவர் என்றும் தன்னை அன்பாக பார்த்துக்கொள்வார் எனவும் யாரையும் தண்டிக்க வேண்டாம் என்றும் இறந்தவரின்  கையெழுத்தில் இறப்பதற்குமுன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் பொகவந்தலாவ பொகவானை தோட்டப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75வயது கொண்ட பெரியண்ணன் கருப்பையா என

அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

Related Posts

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் புதிய விலைகள்.

November 30, 2023

நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நீர் தேவையினை பூர்த்தி செய்ய உதவிய Cargill’s கொத்மலை நிறுவனத்தின் சரூ பிம சமூக நலத்திட்டம்

November 30, 2023

நுவரெலியா தபாலகத்தை கைமாற்றுவதற்கு எதிராக மீண்டும் போராட்டம்

November 30, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இ.தொ.கா தவிசாளரும், எம்.பியுமான ராமேஷ்வரன் டுபாய் பயணம்

November 30, 2023
Editors Picks

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2023 Malayagam.lk. Designed by Gnext.

Type above and press Enter to search. Press Esc to cancel.