(க.கிஷாந்தன்)
இந்த தேர்தலில் அநேகமானவர்கள் பலமான எதிர்கட்சியை அமைப்பதற்காக வாக்கு கேட்கின்றார்கள் ஆனால் ஜக்கிய மக்கள் சக்தி வாக்கு கேட்பது பலமான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்காகவும் சஜித் பிரேமதாசவை பிரதராக கொண்டு வருவதற்குமே அதனை நாங்கள் வெற்றி கொண்டே தீருவோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (13) ஹட்டன் கோல்டன் மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன் பழனி திகாம்பரம் மயில்வாகனம் உதயகுமார் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
மலையக மக்களை பொருத்த வரையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களான நாங்கள் மூவரும் இந்த மக்களுக்கு ஆளும் கட்சியில் இருக்கின்ற பொழுதும் எதிர் கட்சியில் இருக்கின்ற பொது மக்களுக்காக சேவை செய்திருக்கின்றோம்.அது மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் இந்த மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்திருக்கின்றோம்.
ஆனால் ஏனைய வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் வருவதும் பின்பு காணாமல் போவதும் வழமையான ஒரு விடயமாக மாறிவிட்டது.
