மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் மற்றுமொரு மகத்தான செயற்திட்டம் நேற்றைய தினம் 29.01.2023 தலவாக்கலை லூசா பிரதேசத்திலுள்ள கின்டிலி ஆரம்ப பாடசாலை திறப்பு விழா இடம்பெற்றது.
மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் தலைவர் சிங்கராஜ் அவர்களின் வழிகாட்டலுக்கமைய, செயலாளர் செல்வி லதா,
உபதலைவர் சிவகுமார்,
தலவாக்கலை மாவட்ட இனைப்பாளர் திருமதி கமலாதேவி,
நுவரெலியா மாவட்ட இனைப்பாளர் செல்வன் நவீன், மற்றும் ம.இ.பொதுப்பணி அங்கத்தவர் டிக்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் தலவாக்கலை பிரிவுக்கான பொலிஸ் அதிகாரி திரு யோகா மற்றும் பண்டார,G.S.A.K.பிரபாகரன், K.P.ஜோன் மற்றும் அருள், தோட்ட தலைவர் மற்றும் இளைஞர்கள், பெற்றோர்கள்
கோவில் பரிபால சபை, ஆரம்ப பாடசாலை முன்னாள் ஆசிரியர்கள் என பலரும் வருகைதந்து இந்த முன்பள்ளி திறப்பு விழாவினை சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வுக்கு மலையகம்.lk ஊடக பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.