Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

August 15, 2026

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026

கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையகத்தின் இதயமெனக் கருதப்படுகின்ற நுவரெலியாவில் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும்
மலையகம்

மலையகத்தின் இதயமெனக் கருதப்படுகின்ற நுவரெலியாவில் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும்

ThanaBy ThanaOctober 18, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

மலையக மக்களின் அரசியல் இருப்பை தீர்மானிக்கின்ற மிக முக்கிய மாவட்டமே நுவரெலியா மாவட்டமாகும். மலையகத்தின் இதயமெனக் கருதப்படுகின்ற இம்மாவட்டத்தில் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும். எனவே, மக்களுடன் இருக்கும் எம்மை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள், ஆணை வழங்குவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான மருதபாண்டி  ராமேஸ்வரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் நாம் தனித்துவமாகக் களமிறங்கியுள்ளோம். தேசியப் பட்டியலில் எம்மவர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தலவாக்கலை மடக்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்களின் அரசியல் இருப்பென்பது மிக முக்கியம். எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நமக்குரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றம் வேண்டுமெனக் கூறி சிலர் வந்துள்ளனர். அவர்களை நம்பினால் கடைசியில் ஏமாற்றம்தான் ஏற்படும். அது தனி நபருக்கு ஏற்படும் தோல்வி அல்ல, ஒரு சமூகத்தின் தோல்வியாக மாறிவிடும்.

கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து ஐந்து தமிழர்கள் நாடாளுமன்றம் சென்றிருந்தோம். அதில் நானும், எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் ஆளுங்கட்சியில் இருந்தோம்.

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்வித்துறைக்கு நாம் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளோம்.

எமது சமூக முன்னேற்றத்துக்கு கல்வியே சிறந்த ஆயுதம். அதனால்தான் கல்விக்கு முன்னுரிமை வழங்கினோம்.

தேர்தலில் வெல்ல முடியாது என தெரிந்தும் சிலர் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். நான்கு வருடங்களுக்கு முன்னர் மலையகம் வந்துசென்றவர்கள், தற்போதுதான் மீண்டும் வருகின்றனர். எனவே, அவர்களின் நோக்கம் என்னவென்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் மக்களோடு மக்களாக வாழ்கின்றோம். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின்போது அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு குரல் கொடுத்துவருகின்றோம். எனவே, எம்மை நாடாளுமன்றம் அனுப்பு வையுங்கள்.

யானை சின்னமென்பது மலையக மக்களுக்கு நன்கு பரீட்சயமான சின்னம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாம் தனித்துமாக போட்டியிடுகின்றோம். நானும், எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும், சக்திவேலும் போட்டியிடுகின்றோம். எம்மை நாடாளுமன்றம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை*

    August 13, 2026
    Editors Picks

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.