இரத்தினபுரி, கஹவத்தை எந்தானை கப்பலை தோட்ட பிரதேசத்தில் சீரற்ற காலநிலை காரணமாக தோட்ட குடியிருப்பு லயன் மீது மரம் முறிந்து விழுந்ததில் குடியிருப்பு முழுமையாக சேதமாகி உள்ளது.
கடந்த காலங்களில் தோட்ட குடியிருப்புகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் மரங்களை அகற்றி விடுமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்திருந்தும் கூட அவர்கள் அதனை கண்டு கொள்ளாத பட்சத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் .
