பூண்டுலோயாவில் மக்கள் நலன்கருதி சூப்பர் கோப் சிட்டியின் சம்பிரதாய திறப்பு விழா
நேற்று (23)பூண்டுலோயா ஷீன் எஸ்டேட், எல்பிட்டிய பெருந்தோட்ட தாக்கம் தனியார் நிறுவனம் ஊடாக நேற்று தோட்ட மக்கள் நலன் கருதி திறந்து வைக்கப்பட்டது.
இதன் நோக்கம் தோட்ட மக்கள் வலுப்படுத்தவும், அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மலிவு வழியில் பொருட்களை பெற்று கொள்ள இந்த கூட்டுறவு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் எல் பிட்டிய தோட்டங்களின் DCEO கீத் குமார, PHDT, நுவரெலியாவின் பிராந்திய இயக்குனர் தேவரஞ்சன், DGM திரு. அசேல உடுமுல்ல, PALM அறக்கட்டளையின் குழுத் தலைவர் மற்றும் ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த கூட்டுறவு சங்கம் திறப்பதற்கு ஏற்பாடு செய்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் இந்த வெற்றிகரமான முயற்சிக்கு பங்களித்த எல் பிட்டிய கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர், இணை முகாமைத்துவ பணிப்பாளர், இயக்குனர் தலைமை நிர்வாக அதிகாரி, பொது முகாமையாளர், தோட்ட முகாமையாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட எல்பிட்டிய பெருந்தோட்டத்தின் உயர் நிர்வாகத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டம் PHDT ஆல் வசதி செய்யப்பட்டது மற்றும் PALM அறக்கட்டளையின் ஆதரவுடன் எல் பிட்டிய பெருந்தோட்ட பி.எல்.சி.யால் செயல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக சீன் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் மலிவான விலையில் பெற்று கொள்ள முடியும்.
அத்துடன் தங்களது வருமானத்திற்கு ஏற்ப தவனை முறையில் செலுத்தும் வகையில் (கடன்) பொருட்களை பெற்று கொள்ள முடியும்.
கெளசல்யா








