இன்று (01) காலை 7.45 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பதுளை மஹியங்கன பிரதான வீதியின் நான்காவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் (துன்ஹிந்த நுழைவு வீதிக்கு அருகில்) பேருந்து கவிழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் விபத்தில் 35 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த பேருந்தில் 41 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது.
