Galle sacred heart convent சிறுவர் விளையாட்டு பூங்காவில் அருட்சகோதரிகள் ஆசிரியர், பெற்றோர் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசியபொங்கல் விழா பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போகிபொங்கல் ,தைப்பொங்கல்
பட்டிப்பொங்கல் , காணும் பொங்கல் என கொண்டாடப்படும் விழாவாகவும் சூரியனுக்கு பெறுமதியான நன்றி தெரிவிக்கும் உழவர்களின் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது.
விவசாயின் மனிதநேயத்தையும் இயற்கை நேயத்தையும் உலகிற்கு பறைசாற்றும் ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் விளங்குகின்ற தைப்பொங்கல் விழா மூவின மக்கள் கல்வி கற்கும் Sacred Heart Convent Preschool மாணவ செல்வங்களின் அழகிய மழலை மொழியின் பொங்கலோ பொங்கல் என்ற இனிமையோடு தொடக்கப்புள்ளி இடப்பட்டது.
பால்பொங்கி சூரியன் மலர நவதானியங்கள் படையல் வைத்து ஆராதனை காட்டப்பட்டதோடு பல்வேறு கலை கலாசார அடையாளங்கள் பிரதிபலிக்க தமிழர் பண்பாட்டு பாரம்பரியங்கள் இளஞ் சந்ததியினரும் கடைப்பிடிக்கும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்விழாவில் யாவரும் இன்புற்றிருந்ததோடு பிரமாண்டமான பொங்கல் நவரசங்களோடு பரிமாறப்பட்டு உண்டு மகிழ்கின்ற விருந்தோம்பலின் உயர்வையும் எடுத்துக்காட்டியது .
ஷான் சதீஸ்