Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

August 27, 2026

சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

August 27, 2026

மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

August 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வட மாகாணத்தில் நாளை சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பு
Breaking

வட மாகாணத்தில் நாளை சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பு

ThanaBy ThanaNovember 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று காலை மத்திய-தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள
நவம்பர் 26 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தொகுதி இன்று காலை 0830 மணியளவில் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 600 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. அத் தொகுதி மேலும் வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்குமாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

    August 27, 2026

    சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

    August 27, 2026

    மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

    August 27, 2026

    இலங்கைத் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவுறுத்தல்

    August 27, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.