Clean and Green City Srilanka
2023 பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் வளர்ச்சியில்; இளம் சந்ததியினரின் பங்களிப்பு, தலையீட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் “75இல் இளைஞர்களின் முன்னுதாரணம்” பசுமையான இலங்கை (Clean and Green City Srilanka) எனும் தொணிப்பொருளில் நகர தூய்மையாக்கல் வேலைத்திட்டம் 2023 பெப்ரவரி 3ம் திகதியிலிருந்து ஒரு வாரத்திற்கு இலங்கையின் சகல பிரதேச செயலகப்பிரிவிலும் ஒவ்வொரு நகரங்களை தெரிவுசெய்து செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சிரமாதான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2023.02.03 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்களின் தலைமையில் அவ்வமைச்சின் செயலாளர் கே.மஹேஷன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்ஃபணிப்பாளர் நாயகம் கலாநிதி திரான் டீ சில்வா, மஹரகம பிரதேசசெயலகர் தில்ருக்ஷி வல்பொல ஆகியோரின் பங்குப்பற்றலுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதான காரியாலயத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் மஹரகம நகரின் 5 இடங்களில் நகர தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
1. வத்தேகெதர -மஹரகம அரச மர சந்தி வரை
2. மஹரகம அரசமர சந்தியிலிருந்து பழையவீதி (பமுனுவ-லாப்ஸ் வரை )
3. மஹரகம அரசமர சந்தியிலிருந்து தேசிய கல்வி நிறுவகம் வரை (ஹை லெவல் வீதி )
4. மஹரகம மணிக்கூட்டு கோபுர நாற்சந்தியிலிருந்து தெஹிவலை வீதியில் புற்றுநோய் வைத்தியாசலை சந்தி வரை.
5. மஹரகம தெஹிவலை வீதியின் குழழனஉவைல(ஊயசபடைள)யிலிருந்து பிலியந்தல வீதியின் 500ஆ வரை
தூய்மையாக்கல் மற்றும் சுத்திகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்வேலைத்திட்டம் அதே சமயத்தில் நாட்டின் சகல பிரதேச செயலகப்பரிவுகளிலும், நகரசபை நிறுவனங்களின் பணித்தொகுதியினர்;, இளைஞர் யுவதிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குப்பற்றலுடன் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
மஹரகம