கம்பளை நகரில் இருந்து நாவலப்பிட்டி பிரதான நோக்கி சென்ற மரக்கறி ஏற்றி சென்ற லொறி ஒன்று கம்பளை இலங்கை போக்குவரத்து பஸ் தரிப்பிடத்திற்க்கு முன்பாக அதிகமான மக்கள் பாதை கடக்கும் மஞ்சள் கடவை அருகில் உள்ள வியாபார நிலையத்தின் ஒன்றின் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளதோடு ,குறித்த இடத்தில அமைந்துள்ள மஞ்சள் கடவையை கடந்துகொண்டிருந்த பயணிகள் மீது ஏற்படவிருந்த பாரியவிபத்தை வாகன சாரதி தடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னேடுத்துள்ளனர்.
