எதிர்வரும்சிறுபோகத்தின் போது, நெல் மற்றும் சோளம் செய்கைக்காக யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது, உர மற்றும் வர்த்தக உர நிறுவனங்களுக்;கு சொந்தமான களஞ்சியசாலைகளில் 30ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் காணப்படுகிறது. அதனைத் தவிர, மேலும் 25 ஆயிரம்மெற்றிக் தொன் யூரியா உரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கென பத்து பில்லியன்ரூபா ஒதுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒருலட்சம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை கையிருப்பில் வைத்துக் கொண்டு, சிறுபோகத்தில்நெல், சோளம் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான யூரியா உரம் பகிர்ந்தளிப்பது நோக்கமாகும். சிறுபோக நெற் செய்கைக்காக சேதனப் பசளை, பண்டி, யூரியா உர வகைகளை,தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்குவது விவசாய அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.
ஆரம்ப உரமான சேதனப் பசளை, சிறுபோகத்தின் ஆரம்பத்திலேயே விவசாயிகளின் தேவைக்கேற்ப,முழுமையாக இலவசமாக வழங்கப்படவுள்ளது. 36ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் இந்த மாத நடுப்பகுதியில் துறைமுகத்தைவந்தடையவுள்ளது.
மேலதிகமாக, 35 ஆயிரம் மெற்றிக் தொன் பண்டி உரம், உரநிறுவனத்திடம் காணப்படுகிறது. அதன்படி, சிறுபோகத்தில் நெல் வயல்களுக்கு தேவையானஉரத்தை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரமேலும் தெரிவித்துள்ளார்.