இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் சமய நிகழ்வு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று (04) காலை நடைபெற்றது.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
அமைச்சர்களான அலி சப்ரி, ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த படைப்பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் அலிசப்ரி, இலங்கையின் சுதந்திரத்திற்காக அனைத்து சமூகத்தினரும் செயற்பட்டனர். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களிலிருந்து மீள்வதற்கும் சகல சமுகத்தினரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய திறன் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் முஸ்லிம்களால் பங்களிப்பு வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.