இன்று (06/01/2025) காலை 09.40 மணியளவில் கொட்டகலை பிரதேசத்தில் குடுஓயா கிராமசேவகர் பிரிவில், கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கடைக்கு முன்பாக கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். காயமடைந்தவர் ஸ்டோன்கிளிப் தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதான மலித் குமார் என்பது தெரிய வந்துள்ளது.விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
