Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

June 13, 2026

உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

June 13, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

June 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பமாகிறது
இலங்கை

உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பமாகிறது

ThanaBy ThanaJanuary 9, 2025Updated:January 9, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் நடைபெறவுள்ள உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து நடத்துகிறது.

கொழும்பில் ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை பார்வை கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம்.

இதேவேளை, கொழும்பில் சினமன் லைப் ஹோட்டலில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை பார்வை கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம்.

யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபத்தில் இம்மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையும், காலியில் மாநகர சபையில் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.

இலங்கையில் நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று புதன்கிழமை (08) கொழும்பிலுள்ள சினமன் லைப் ஹோட்டலில் நடைபெற்றது.

ஊடக சந்திப்பில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பட்ச், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி முகாமையாளர் மற்றும் கண்காணிப்பாளர் மார்தா எச்செவர்ரியா கோன்சலஸ் மற்றும் சினமன் லைப் ஹோட்டல் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் ரதிஷா தளுவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊடக சந்திப்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் உரையாற்றுகையில்,

நாங்கள் புகைப்படங்கள் ஊடாக கதைகளை சொல்லும் கலையை கொண்டாடுவதற்காக இங்கே கூடியிருக்கின்றோம்.

இந்த ஊடகம் மொழி போன்ற தடைகளை கடந்து மிகவும் முக்கியமான கதைகளுடன் எங்களை இணைக்கின்றது. தொடர்புபடுத்துகின்றது.

இந்த பயணம் டிசம்பர் 1955 இல் ஆரம்பமானது, இது ஆம்ஸ்டடாமில் ஆரம்பமானது. தற்போது உலகை வலம் வருகின்றது.

சவால்களை வெளிப்படுத்தும் இந்த கண்காட்சி அதேவேளை உத்வேகம் அளிக்கும் உயர்தரம் வாய்ந்தகாட்சி கதைகளை வெளிப்படுத்துகின்றது.

செழிப்பான கலாச்சார பாரம்பரியத்தை பன்முகதன்மையை கொண்டுள்ள கொழும்பு இந்த கண்காட்சியை நடத்துவதற்கு பொருத்தமான இடமாகும்.

பத்தாம் திகதி நாங்கள் காட்சிப்படுத்தும்போது இந்த அற்புதமான படங்களை காட்சிகதைகளை நீங்கள் பார்க்கும்போது, சொல்லப்படாத கதைகள் குறித்து கவனத்தை திசைதிருப்புவதற்கான புகைப்படக்கலையின் தனித்துவமான திறமை உங்களுக்கு நினைவுக்கு வரும்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஊடக சுதந்திரத்திற்காகவும் நெறிமுறையான ஊடகதுறைக்காகவும் குரல்கொடுப்பதில் முன்னணியில் உள்ளது என்றார்.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பட்ச் இந்த சந்திப்பில் குறிப்பிடுகையில்,

இலங்கையில் நாளை ள்ெளிக்கிழமை 2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி ஆரம்பமாவுள்ளதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இந்த கண்காட்சி இலங்கையில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கையில் நடைபெறுகிறது.

இலங்கை போன்ற வலுவான ஜனநாயக நாட்டிற்கு ஊடக சுதந்திர உரிமை குறித்த விழிப்புணர்வு அவசியம்.

அதனாலேயே நெதர்லாந்து தூதரகம் இலங்கையில் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சி ஊடாக சுதந்திர மற்றும் தகவல்களை பெறுவதற்கான உரிமைகளுக்கு ஆ தரவளிக்கின்றோம் என்றார்.

உலக பத்திரிகை புகைப்படம் கண்காட்சி முகாமையாளர் மற்றும் கண்காணிப்பாளர் உலக பத்திரிகை புகைப்படம் மார்தா எச்செவர்ரியா கோன்சலஸ் குறிப்பிடுகையில்,

இவ்வருடம் உலக பத்திரிகை புகைப்பட விருது 70 ஆவது ஆண்டை கொண்டாடுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படப் போட்டிக்கு இம்மாதம் ஆம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக் លក់ https://www.worldpressphoto.org/contest/2025 இணையத்தளத்தை பார்வையிடலாம் என்றார்.

2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படப் போட்டி வெற்றி பெற்ற புகைப்படங்களைப் பார்வையிட உலகளாவிய ரீதியில் புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

    June 13, 2026

    உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

    June 13, 2026

    ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

    June 13, 2026

    ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (CHEC) தலைவருக்கும் இடையில் சந்திப்பு

    June 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.