மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட சர்வ தேச மனித உரிமை ஆய்வாளர் மலையகத்தின் கல்விமானும் கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் தேசிய உயர்மட்ட அரசியல் பீட உறுப்பினராக நியமிக்கபட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினரும் ,மலையக தேசிய குழு உறுப்பினரும் ஆவார். தேசிய அரசியல் பீட உயர்மட்ட குழுவிலே ஜனாதிபதி அவர்கள் மற்றும் பிரதமர் அவர்கள் முக்கியமான உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழுவிலே நாட்டின்னுடைய தேசிய கொள்கை திட்டாங்களையும் செயல் திட்டங்களையும் தீர்மானம் எடுப்பதும் நிறைவேற்றுவதும் பொறுப்பாகும். இந்த குழுவில் கலாநிதி சிவப்பிரகாசம் அவர்கள் தெரிவு செய்ய பட்டுள்ளது மிக முக்கியமானா ஒரு விடயாகும் .
