பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் பயணிக்கும் விசேட விரைவு ரயில், கம்பளை மற்றும் உலப்பனை ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (9) பிற்பகல் தடம்புரண்டதால், மலையக ரயில் சேவையின் பதுளை-கொழும்பு கோட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்திருந்தது.
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, தடம் புரண்ட ரயிலின் இயந்திரம் சுமார் 270 அடி முன்னோக்கி நகர்ந்து, மலைச்சரிவில் மோதி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் ரயில் தண்டவாளங்களுக்கும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் இன்று (10) காலை வரை நிறுத்தப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.
