நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இரண்டு முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சிகள், இரத்ததான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் சிறப்பு நிகழ்ச்சியாக ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்று இருக்கும் 1000 பேருக்கு அன்னதானம் (இப்தார்) வழங்கும் நிகழ்ச்சி 15ம் திகதி மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது.
இசுலாமிய பாடசாலை என்ற வகையில் சமய நிகழ்ச்சிக்கு முன்னுரிமை வழங்கி உள்ளூர் வளவாளர்கள் மற்றும் பெற்றோர்களின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக நுவரெலியா சாஹிரா வித்தியாலய அதிபர் நிஸாம் டீன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இஸ்லாமிய மதத் தலைவர்கள், நுவரெலியா பிராந்திய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர்கள், நுவரெலியாவிற்கு அருகில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

