Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

August 31, 2026

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

August 31, 2026

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கையில் கடற்றொழில்துறை நவீனமயப்படுத்தப்படும் – ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும்
இலங்கை

இலங்கையில் கடற்றொழில்துறை நவீனமயப்படுத்தப்படும் – ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும்

ThanaBy ThanaMarch 18, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் ராஜா குரூஸ், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் மொஹமட் ஆலம், வட மாகாண கடற்றொழில் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோர், அமைச்சரை யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

தமிழக மீனவர்களின் அத்துமீறலால் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மீன்பிடி சட்டம் வரைபு திருத்தம்,  உள்ளுர் மின்பிடியில் தடை செய்யப்பட்டுள்ள மின்பிடி நடவடிக்கை என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் கூறியவை வருமாறு,

” இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் ஆவண படமொன்றை தயாரித்துள்ளனர். அதனை எனக்கு காண்பித்தனர்.

அதேபோல இந்திய மீனவர்கள் எமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல, உள்நாட்டிலுள்ள சிலரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிக்கின்றனர். எனவே, இவற்றை தடுத்து நிறுத்தி எமது நாட்டின் கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும்.

அதேபோல் கடற்றொழிலை நவீனமயமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆழ்கடல் மீன்பிடிக்காக கப்பல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளன. அவை ஊடாக ஆழ்கடல் மீன்பிடி ஊக்குவிக்கப்படும்.” – என்றார்.

ஊடக செயலாளர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

    August 31, 2026

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.