Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

July 29, 2026

நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

July 29, 2026

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறையில் உள்ளது…
இலங்கை

நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறையில் உள்ளது…

ThanaBy ThanaFebruary 8, 2023Updated:February 8, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

Yஇந்த நாட்டில் 13வது அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவே, புதிதாக செயல்படுத்த எதுவும் இல்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்திருக்கின்றமையால் மேலும் அது பற்றிப் பேசிப் பேசி வார்த்தைகளை நிரப்பிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் கம்பஹா மாவட்ட பொதுஜன பெரமுன வழிநடத்தல் குழுவுடன் நேற்று (7) கொழும்பில் கலந்துரையாடலில் இணைந்து கொண்ட போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

13வது அரசியலமைப்பு திருத்தம் பற்றி தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் அது பற்றிப் பேசிப் பேசி வார்த்தைகளை நிரப்பிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றார்.  நாங்கள் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தி  அது முடிந்து விட்டது. புதிதாக நடைமுறைப்படுத்த எதுவும் இல்லை. நான் மாகாண முதலமைச்சர் ஆனதும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்த நாட்டில் செய்படுத்தப்பட்டதானாலாகும்.

ஜனதா விமுக்தி பெரமுன நாட்டு மக்களை கொன்று நாட்டையே அழித்த கட்சி. நாங்கள் வன்முறையற்ற கட்சி. நாங்கள் மக்களை கொன்ற கட்சி இல்லை. கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசிகளைக் கொடுக்க நம் மக்கள் தலையிட்டனர். கிராமத்தில் வீதிகளை அமைத்துக் கொடுத்த மக்களுக்கு தொழில்களை ஏற்படுத்திக் கொடுத்த நமக்கு மக்களுக்கு மத்தியில் போக முடியாமல் இருப்பது ஏன்?

நாங்கள் நாட்டில் வீதிகளை அமைக்கும் போது 10 வீதம் கமிஷன் எடுக்கப்படும் என்ற கருத்தை உருவாக்கினார்கள். அதற்கு பயந்து வீதி அமைப்பதை நிறுத்தினர். அது நாட்டின் வளர்ச்சியை நிறுத்தியது. நாங்கள் கட்டிய வீதிகளில் எங்கள் கட்அவுட் வைப்பதை நிறுத்தி விட்டோம், ஆனால் இப்போது ஜனதா விமுக்தி பெரமுன நாங்கள் அமைத்த வீதிகளில் கட்அவுட்கள் வைத்துள்ளன. இது குறித்து மக்களிடம் பேச வேண்டும். அப்போதுதான் கிராம மக்களுக்கு உண்மை நிலவரம் புரியும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு நாம் முதலில் கிராமசேவக தொகுதி மட்டத்தில் கூட்டங்களை நடத்த வேண்டும். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் பிரதேச மட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்கிறோம். இது விருப்பு முறைமையில் நடைபெறும்  தேர்தல் அல்ல, எனவே வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். நாங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளரின் விருப்பங்கள் மற்றும் தேவைகளைப் பற்றி நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

அனுரகுமார ஏற்கனவே ஜனாதிபதி உடையை அணிந்துள்ளார். பேஸ்புக்கின் ஜனாதிபதியாகவும் உள்ளார். ஜனாதிபதி என்று நினைத்துக்கொண்டு நடக்கிறார், பேசுகிறார். அவர் கனவு கண்டாலும் அவரால் மக்கள் இதயங்களில் ஜனாதிபதியாக வர முடியாது. அதனாலேயே அநுரகுமாரவை அந்தக் கனவை தொடரச் சொல்லுவோம். கீழ் மட்டத்திற்குப் போய் வேலை செய்து இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையை விட இப்போது இருக்கும் நிலைமை நன்றாக உள்ளது. உள்ளூராட்சி சபைத்  தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முடிவு என்னவாக இருந்தாலும் நாங்கள் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு மத்தியில் செல்ல வேண்டும்.

எங்கள் மக்கள் வெளியே செல்ல தயாராக உள்ளனர். அதற்குத் தேவையான தலைமையை நாங்கள் வழங்குகிறோம். சில ஜே.வி.பி வேட்பாளர்களுக்கு அவர்களின் தொகுதியின் நான்கு எல்லைகள் தெரியாது. அவர்களின் மாகாணங்களில் இருந்து வந்தவர்கள்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் கம்பஹா மாவட்டத்தில்  பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இங்கு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, சிசிர ஜயக்கொடி, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் பிரதீப், மிலான் ஜயதிலக்க, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கோகிலா ஹர்ஷனி குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026
    Editors Picks

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.